Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே உஷாராகுங்க… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் உள்ள ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள ஆண்களின் உயிரணு க்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான ஆண்களிடம் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், 1973 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2011 ஆம் ஆண்டில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் மேலும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நவீன வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் மற்றும் ரசாயனங்கள் பயன்பாடுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால் ஆண்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.

  • போதுமான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் அவசியம்.
  • புகைப்பிடிப்பதை நிறுத்தவும்
  • அளவுக்கு மீறி மது அருந்தக்கூடாது.
  • ஆன்டிபயாடிக், ஆண்டி டிப்ரசண்ட், ஸ்டீராய்டு மருந்துகளை தவிர்க்கவும்.
  • கருவேப்பிலை, அஸ்வகந்தா மூலிகை, விட்டமின் டி மற்றும் விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் 6 சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.
  • மன அழுத்தம், அதிக வெப்பம், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள்.

Categories

Tech |