நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களைக் குறிவைத்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் காவல் துறையின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப்பிரிவு கடந்த 4 மாதங்களில் 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கும்பல் பீகாரில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலமாக மக்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் போலி ஆவணங்கள் மூலமாக பெறப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கும்பல் ஆண்களைக் குறிவைத்து இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். அந்த கும்பலில் உள்ள பெண், முதலில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஆபாச செய்தியை அனுப்பி வைக்கின்றார். அந்த ஆண் அதற்கு பதில் அளித்தால் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்கிறார். அதன் பிறகு வீடியோ காலில் ஆடைகளை கழற்ற தொடங்கும் பெண், மேலும் உடையை கழட்ட பதிலுக்கு அந்த ஆணும் ஆடைகளை கழற்ற சொல்கிறார்.
ஆணும் உடைகளை களட்டினால் பிறகு அந்த ஆணை நிர்வாண வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவரை மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கின்றனர்.எனவே அடுத்தடுத்து தெரியாத நம்பர் மூலம் வரும் அழைப்புகளை யாரும் ஏற்க வேண்டாம் என்றும் தெரியாதவர்களுடன் வீடியோ காலில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை அப்படி நடந்தால் உடனடியாக புகார் கொடுக்க தயங்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.