தாடி வளர என்ன செய்ய வேண்டும் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
அதிகமான பெண்கள் வரப்போகும் கணவன் எப்படி இருக்கணும் கேட்டா அதிக படியான பெண்கள் கூறுவது தாடி இருந்தா அழகா இருபாகனு. ஆனால் ஒரு சில ஆண்களுக்கு தாடி வளர்வது இல்லை அதனால் அதனை எப்படி வளர செய்வதுனு பார்ப்போம்.
ஜூஸ்கள் வகைகள் :
ஜூஸ்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள், உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? தாடியின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே ஜூஸ்களை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஸ்கால்ப் மற்றும் முடிக்கு ஒரு நல்ல பராமரிப்பு கிடைக்கும்.
பழங்கள் :
பல்வேறு பழங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் அற்புதமான சுவையுடனும், தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களுடனும் உள்ளது. வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இந்த பழங்களை அதிகமா சாப்பிட்டு வாருங்கள் .
முட்டை வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயோடின் ஏராளமாக நிறைந்துள்ளது.