Categories
தேசிய செய்திகள்

ஆண்களே…..! யாருக்கும் வீடியோ கால் பண்ணாதீங்க…… சிக்கிடுவீங்க…..!!!!

உத்திரபிரதேசத்தில் ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் பணம் பறித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. முன்பெல்லாம் செல்போன் மூலம் உங்களை அழைத்து உங்களது வங்கி கணக்கு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இதனால் உங்களின் அக்கவுண்ட் எண் போன்ற வங்கி விவரங்களை கொடுங்கள் என்று கேட்டு அதை வைத்து வங்கியில் உள்ள பணத்தை திருடி வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது புது ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் பெண்களை வைத்து பணம் பறித்து வருகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் வந்த பெண்கள் அந்த நபரை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி ஆண்களுடன் நட்பாக பேசுவது போல நடிப்பது இவர்களின் வாடிக்கை. அந்த உறவை மேம்படுத்தி வீடியோ காலில் நிர்வாணமாக பேசும்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து ஆண்களை மிரட்டி வந்துள்ளனர். இப்படி அநாகரிகமாக பணம் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |