பெண் ஒருவர் இரண்டு ஆண்களை கொன்று சமைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள cheshire பகுதியில் வசிக்கும் Kati Jones (30) என்ற பெண் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்போது நான் ஒருவரை கத்தியால் குத்திவுள்ளதாக கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால் Kati கதவை திறக்க மறுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் உள்ளே நுழைந்தால் கைகளை வெட்டிக் கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
அதன்பின்பு கதவில் தன் தலையை இடித்து கொண்டுள்ளார். அதன் பின்பு தன் வீட்டில் இருக்கும் ஆண்கள் இருவரை கொன்று அடுப்பில் சமைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளனர். அதற்கு அவர் துண்டு துண்டாக வெட்டி கொன்று விடுவேன் என்று காவல்துறையினரை மிரட்டியுள்ளார். மேலும் எனக்கு நேரம் எனக்கு சிகரெட் வேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். அதன் பின்பு காவல்துறையினரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் Kati யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன்பின்பு அவரிடம் உலோக ஆயுதம் இருப்பதை அறிந்த காவல்துறையினர் ஷாக் கொடுக்கும் டேசர்களை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அவர் வைத்திருந்தது கத்தி அல்ல கரண்டி என்பதை அறிந்து காவல்துறை நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பின்பு இருவரை கொன்று சமைத்து விட்டேன் என்று இந்த பெண் கூறியதால் வீட்டினுள் நுழைந்து அறைக்குள் பார்த்துள்ளனர். அங்கு ஆண்கள் இருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
அதாவது கடந்த மூன்றரை மணி நேரங்களாக நடந்தது எதுவுமே தெரியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார்கள். மேலும் காவல் துறையினரின் நேரத்தையும் மக்களின் வரிப்பணம் 1002 பவுண்டுகள் ஆகியவற்றை வீணாகியதாக இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து Kati நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதில் அவருக்கு மன நலப் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கும் 300 பவுண்டுகள் மட்டுமே அபராதம் விதித்து 12 மாதங்கள் சமூக சேவைகள் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.