சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அர்ஜூனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பல பெரிய நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ஜுன் தான் . போட்டியாளர்களுடன் அர்ஜுன் உரையாடும் விதத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்களை ஊக்கப்படுத்துவதிலும், தவறு செய்யும்போது கண்டிப்பதிலும் அர்ஜுன் வேற லெவல். இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற போட்டியாளர் தனக்கு பிரைவசி இல்லை என கூறினார் .
இதை அர்ஜுன் அவரிடம் கேட்க, நான் அவ்வாறு சொல்லவில்லை என வாக்குவாதம் செய்கிறார். அப்போது அர்ஜுன், ‘இதை நிரூபித்தால் வீட்டிற்கு செல்ல தயாரா?, இங்கு பாத்ரூமை தவிர வேறு எங்கும் பிரைவசி கிடையாது. நீங்க எப்படி விளையாடுறீங்க என்பதை பார்க்க தான் இந்த நிகழ்ச்சி. பிரைவசி வேண்டும் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே’ என கடுமையாக கூறினார். இதனால் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி என அர்ஜுனை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் பிக்பாஸில் வரும் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ டயலாக் சர்வைவர் நிகழ்ச்சிக்கு தான் பக்காவாக பொருந்தும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் .