தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். மேலும் கமல் இந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் “விக்ரம்” படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் ‘ஆண்டவனா சும்மாவா என்கிறார்கள்’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் கமலஹாசனும் லோகேஷ் கனகராஜும் போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில் ஒருவேளை தலைவர் 170 படம் குறித்து பேசி இருப்பார்களோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது.