கனடா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஒட்டாவாவில் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள சமூக ஊடகங்க பயனாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்குமிடையே எல்லை தாண்டும் ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ட்ராக்டர் ஓட்டுனர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளார்கள். மேலும் freedom convoy என்ற போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் இந்தியாவிலுள்ள சமூக ஊடக பயனாளர்கள் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
அதாவது இந்தியாவின் தலைநகரில் நடந்த விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்த கன்னட பிரதமர் அவர் நாட்டில் நடக்கும் முற்றுகை ஆர்ப்பாட்டத்தை கண்டு ஓடி மறைந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்கள்.