யுஜிசி உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக இந்தியா முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test – CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் CUET தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.