சட்டவிரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வங்கிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம்.
இந்த புதிய விதிமுறையின் படி வங்கிகளில் ஒரே நேரத்திலோ அல்லது பல முறையோ, ஒரே வங்கியிலோ அல்லது பல வங்கிகளோ ஒரே கணக்கில் 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்வது கண்காணிக்கப்படும். சட்ட விரோதம் மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தவும் முடியும். இந்த புதிய விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம், விதிகளை கொண்டு வந்துள்ளது.