Categories
பல்சுவை

ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்!….. “இந்தியாவிற்கு வந்துவிட்டது”…… வெளியான ஷாக் நியூஸ்…..!!!

கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பல ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் Trojan என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறது. SOVA’ என்ற வைரஸ் ஒருமுறை நமது போன் உள்ளே நுழைந்துவிட்டால், Uninstall செய்வது மிகவும் கடினமாகும். இந்த வைரஸ் தொடக்கத்தில் US, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்துள்ளது. அதாவது இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த ஜூலை மாதம் வந்தது. தற்போது இந்த வைரஸ் 5வது வெர்ஷன் அப்டேட் பெற்றது. இதனால்  இந்தியாவில் மொபைல் பேன்கிங் பரிவர்த்தனை செய்யும் வாடிகையாளர்கள் மற்றும் வங்கிகள் மிகவு ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் முதல் வெர்ஷன் தடை செய்யப்பட்டதா சந்தைகளில் விற்பனைக்கு இருந்ததாகவும் தற்போது இது மேலும் மேம்படுத்தபட்டு வாடிகையாளர்களின் பெயர், பாஸ் வேர்ட், குக்கீஸ், ஆப் விவரங்கள் போன்றவற்றை திருடுகிறது.

அதனைத்தொடர்ந்து இந்த SOVA வைரஸ் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். முதலில் இந்த வைரஸ் 200க்கும் மேற்பட்ட பேன்கிங் ஆப் போன்று தனது டிசைனை மாற்றிக்கொள்ளும். இதனால் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உண்மையான பேன்கிங் ஆப் டவுன்லோட் செய்வதற்கு பதிலாக இந்த SOVA வைரஸ் கொண்ட ஆப் டவுன்லோட் செய்துவிடுவார்கள். இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களில் மிகவும் பிரபலமான Chrome, Amazon, NFT போன்றவற்றின் லோகோ போன்ற ஆப் அமைப்புடன் இருக்கும். இதைத்தெரியாமல் பயனர்கள் இந்த ஆப் Install செய்துவிடுவார்கள்.அதன் பிறகு உங்களின் பேங்க் எண், வாங்கி இருப்பு போன்றவற்றை தெரிந்துகொண்டு உங்களின் பணத்தை திருடிவிடும். இவை SMS மூலம் உங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

இதனையடுத்து அந்த SMS உள்ளே இருக்கும் லின்கை கிளிக் செய்துவிட்டால் உங்களின் மொபைல் உள்ளே இந்த வைரஸ் ஆப் install ஆகிவிடும். அதன் பிறகு இவற்றை நாம் மீண்டும் வெளியேற்றுவது மிகவும் கடினம். இவற்றில் இருந்து நமது ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க சில வழிகள் உள்ளன. தேவையில்லாத மொபைல் ஆப் ‘install‘ செய்வதை தவிருங்கள். முக்கியமாக ஆப் install செய்வதற்கு முன்னாள் அதன் உள்ளே சென்று எத்தனை பேர் இந்த ஆப் install செய்துள்ளார்கள் என்பதை பாருங்கள். அதனைபோல மொபைல் ஆப் ‘Permission தருவதற்கு முன்னாள் உண்மையில் உங்களுக்கு தேவையா என்பதை சரிபாருங்கள். தனிப்பட்ட பிரவுசர் அல்லது வலைத்தளத்தில் இருந்து எந்த ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் செய்வதை தவிருங்கள். மேலும் SMS மூலம் அனுப்பப்படும் லின்க் உண்மையானதா? என்பதை ஒரு முறை சரிபாருங்கள்.

Categories

Tech |