Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் இந்த இறைச்சி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆந்திராவில் கழுதை இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதால் கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.

நம்மில் சிலர் அதிக இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ஆடு மற்றும் கோழி இறைச்சி தான் மனிதர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். அதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.

அதாவது கழுதை இறைச்சி உடல் வலுவையும், ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் நம்பப்படுவதால் அதிக அளவில் இறைச்சிக்காக கழுதைகள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சட்டவிரோதம் என்பதால் தெரியாமல் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனையடுத்து கழுதை இறைச்சி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |