Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மை குறைவு பிரச்சனை இனிவராது… இத மட்டும் பண்ணுங்க… சீனாவுல கூட இதத்தான் பயன்படுத்துவார்களாம்…!!

நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம்.

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பை வளர்ப்பதற்காக சீனா மருந்துகளில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த நெருஞ்சி செடி. ஆண்மை தன்மையை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் இந்த செடி மிகுந்த அளவில் பயன்படுகிறது.

சீனா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் நெருஞ்சி செடிகளை பயன்படுத்துகின்றனர்.

நெருஞ்சி செடி வாதம் , கபம் போன்றவற்றை குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது.

நெருஞ்சில் கஷாயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி போன்றவை  குறையும். நெருஞ்சி செடி  இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் நன்றாக இயங்க உதவும்.

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை பிரச்சனை தீரும். நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளைச் சுடுநீரில் கொதிக்க வைத்துக் கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும். விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

Categories

Tech |