சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் என்.எம்.கே தெருவில் எலக்ட்ரீசியனான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஈஸ்வரி தனது ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி, உரையாடி அதனை பதிவிட்டதை பார்த்து கோபமடைந்த சாலமன் தனது மனைவியை கண்டுள்ளார்.
நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஈஸ்வரியின் கை மற்றும் தலையில் சாலமன் கத்தியால் தாக்கிய தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ஈஸ்வரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சாலமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.