Categories
சினிமா

ஆண் நண்பருடன் நெருக்கமாக போஸ்…. அப்போ பிக்பாஸில் சொன்னதெல்லாம் பொய்யா பவானி…??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ளீஸ் டாக்கின் பொது ராஜு தன்னுடைய மனைவியிடம் பேசியதை பார்த்து தன்னுடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால் அவருடன் நானும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருப்பேன் எனவும், எங்களுக்கிடையில் என்ன சண்டை வந்து இருந்தாலும் பிக்பாஸ் எங்களை சமாதானம் செய்து வைத்திருப்பார். எனவும் கூறி கண்ணீர் வடித்தார் இது பவானியின் மீதான இரக்கத்தை இன்னும் அதிகரித்தது.

ஆனால் தற்போது இவை அனைத்தும் நடிப்பு என ரசிகர்களால் பேசப்படுகிறது. ஏனெனில் பவானி தனது கணவர் இறந்து சில காலங்களில் தொழிலதிபரான ஆனந்த் ஜாயுடன் தாய்லாந்து சென்று நெருக்கமாக இருக்குமாறு பல புகைப்படங்கள் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது கணவர் இறந்து சில மாதங்களிலேயே ஒரு பங்களா கட்டி அதில் ஆனந்த் ஜாயை கணவர் ஸ்தானத்தில் வைத்து பூஜைகள் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் சென்டிமென்டாக பேசியது நடிப்பு என அவரைப் பற்றி தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |