Categories
உலக செய்திகள்

ஆண் நண்பரை…. திருமணம் செய்த நடிகர்… வெளியிட்டுள்ள பதிவு…!!

நடிகர் ஒருவர் அவரது நெருங்கிய ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான கோடீஸ்வரர் janaathan van ness. நடிகரான இவர் எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் போன்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரர். மேலும் 2020ல் இவரது சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும். இந்நிலையில் தற்போது இவர் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இவர் தன்  சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “என்னை இங்கு வாழ அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி”, மேலும் 2020 ஆம் வருடம் மற்ற வருடங்களை போல் அல்லாமல் வித்தியாசமாக அமைந்துள்ளது. “நான் என் நெருங்கிய நண்பரை திருமணம் செய்துள்ளேன். அதாவது எனது வாழ்க்கையை மேம்படுத்த அன்பான துணைவரை கொண்டிருக்கிறேன்”. மேலும், அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |