கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முப்பிடாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு வேலை முடிந்து வந்த முத்துப்பாண்டி மனைவி இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து முப்பிடாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.