Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் உடலுறவு கொண்டால்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

பல ஆண்டுகளாக ஆண்-பெண் சேர்ந்து வாழும் போது ஒருமித்த உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

அதுமட்டுமன்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு, நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்னவோ வேறு. பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமான பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக ஆண்-பெண் சேர்ந்து வாழும் போது ஒருமித்த உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி ஆண் உறவு கொண்டதை பலாத்காரமாக பார்க்க முடியாது. ஆனால் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பொய் வாக்குறுதி அளிப்பது தவறு என கூறியுள்ளது.

Categories

Tech |