Categories
உலக செய்திகள்

“ஆண் வேடமிட்ட பெண்கள்” செய்த அநியாய செயல்… போலீசை திணறடித்த கும்பல்…!!

ஆண் வேடமிட்டு பெண்கள் பைக்குகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தான் கராச்சி அருகே இருக்கும் மவுரிபூர் என்ற பகுதியில் தொடர்ந்து பைக்குகள் காணாமல் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் காணாமல் போகும் பைக்குகள் யாரால் திருடப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது ஒரு கேமராவில் 18 வயதே நிரம்பிய இளைஞன் பைக் திருடுவது பதிவானது. அதனை வைத்து அந்த இளைஞனை காவல்துறையினர் பல இடங்களில் தேடினர். ஆனால் காவல்துறையினரால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் காவல்துறையினரிடம் பாசித் என்ற இளைஞன் சிக்கினார். அவனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல பல உண்மைகள் வெளிவந்தது. அந்த தகவலின் அடிப்படையில் 18 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஆண்கள் போன்று வேடமிட்டு பைக் திருடியதையும் தன்னுடன் தனது தோழிகளும் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பைக் திருடும் கும்பலை கைது செய்தனர்.

 

Categories

Tech |