சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளை அவர்கள் 18 வயது வரை அல்லது வாழ்நாள் முழுவதும் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அல்லது 044-25952450,6369114871 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.