விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து முதல் நாளே செய்த சேட்டைகள் வைரல் ஆகி வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இந்த முறை டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நேற்று போட்டியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சென்று ஜி பி முத்து வீட்டில் யாரும் இல்லாததால் தனியா இருக்க பயமா இருக்கு சார் என கமலிடம் கூறியுள்ளார்.
அதற்கு கமல்ஹாசன், ஏவாள் வரும் வரை ஆதாம் எப்படி காத்திருந்து இருப்பார்,நீங்க கொஞ்ச நேரம் காத்திருக்க கூடாதா என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு ஒன்றுமே புரியாத ஜி பி முத்து ஆதாமா? அப்படினா? என அறியா பிள்ளையாய் கேட்க அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.அதன் பிறகு கமல்ஹாசன் கதவை பூட்டிக் கொள்ளுமாறு சொன்னபோது பூட்டு இல்லையே என ஜி பி முத்து அடித்த கவுண்டர் கலகலப்பை ஏற்படுத்தியது.