தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பல அரசு திட்டங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கடையநல்லூர் அருகிலுள்ள நயினாகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அத்துடன் அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது “இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக கூறினார். மேலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. 4 வருடம் முதல்வராக இருந்த இபிஎஸ்கு தெரியாதது ஒன்றும் இல்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என பொய் குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். முன்னதாக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக இபிஎஸ் கூறியிருந்தார்” என்று அவர் பேசினார்.