கடலூர் முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொல்லப்பட்ட கொலை வழக்கில் கடலூர் எம்பி ரமேஷை கைது செய்ய சிறிதும் தாமதிக்க கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் எம்பி டி ஆர் வி ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கோவிந்தராசு என்பவர் கொடூரமான முறையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உதவி உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டிஆர்பி ரமேஷ் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? என்றுதான் பல்வேறு குழப்பத்தை ஏற்படுகிறது.
அவர் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரை கைது செய்யாமல் அவரது உதவியாளர்கள் மட்டும் கைது செய்வதால் எந்தவித பலனும் இல்லை. கோவிந்தராஜ் கொல்லப்பட்ட பிறகு அவர் கொலை தொடர்பான ஆதாரங்களை அளித்ததாக குற்றம் சாட்டப்படும் எம்பி ரமேஷையும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்துவிடுவார். எனவே இனியும் தாமதிக்காமல் சிபிசிஐடி போலீசார் உடனே அவரை கைது செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.