Categories
தேசிய செய்திகள்

ஆதாரத்தை காட்டினால்…. மலிவு விலையில் மதுபாட்டில்…. அதிகாரியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…!!!

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை கட்டாயம் காட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அவர், “மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. தடுப்பூசி செலுத்திய உண்மையைச் சொன்னால் மட்டும் போதும் மதுபாட்டில் 10% க்கும் குறைவான விலைக்கு கொடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். மாவட்ட ஆயத்தீர்வை துறை அதிகாரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உள்ளூர் பாஜக எம்எல்ஏ விளக்கம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |