Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்…. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?… இதோ முழு விபரம்…..!!!!

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான ஆதாரமாக ஆதார்கார்டு தான் விளங்கி வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனிடையில் ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. பெரும்பாலும் ஆதார் கார்டை எந்த எண்ணுடன் இணைத்து இருக்கிறோம் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும். ஏதாவது அவசர தேவையின்போது தான் உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வராமல் பதறிக்கொண்டிருப்போம்.

இது போன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக முன்பே ஆதார் கார்டு எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் TAFCOP போர்டல் வாயிலாகவே எளிதாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணை கண்டுபிடித்து விடலாம். அத்துடன் TAFCOP என்ற இணையதளம் வாயிலாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசிக்கும் மக்கள் மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது எப்படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டறியலாம் என்பதை பார்க்கலாம். முதலாவதாக tafcop.dgtelecom.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அங்குள்ள சாட்பாக்ஸில் உங்களது மொபைல் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள OTP எண்ணை பதிவுசெய்ய வேண்டும். OTP எண்ணை பதிவு செய்ததும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் விபரங்கள் காண்பிக்கப்படும். அவற்றில் வேறொருவர் மொபைல் எண் இருந்தால் This is not my number என்ற பகுதியை கிளிக் செய்யவேண்டும். இதன் வாயிலாக தேவையற்ற மொபைல் எண்ணை ஆதாரிலிருந்து நீக்கிவிடலாம்.

Categories

Tech |