ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வகையில் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பெரும்பாலும் ஆதார் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். எனவே பலரும் அந்த போட்டோவை எப்படி ஆவது மாற்ற வேண்டும் என்று கருதுவார்கள்.
அப்படியே ஆதார் கார்டில் போட்டோவை மாற்றுவதற்கு எங்கே செல்ல வேண்டும் எவ்வளவு செலவாகும் என்று பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது. அது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆதார் அட்டையில் தனிநபரின் பெயர் மற்றும் முகவரி போன்றவற்றை ஆன்லைன் மூலமாக எளிதில் அப்டேட் செய்ய முடியும். ஆனால் மொபைல் எண் மற்றும் புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று மாற்ற வேண்டும். அதாவது ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள get Aadhaar என்ற வசதியில் சென்று ஆதார் அப்டேட் படிவத்தை டவுன்லோட் செய்ய வேண்டும்.
இந்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். அங்கு உங்களின் கைரேகை,விழித்திரை ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு புதுப்பிப்பு கோரிக்கை எண் வழங்கப்படும். இந்த எண்ணெய் வைத்து உங்களது விண்ணப்ப கோரிக்கை நிலையை ஆன்லைன் மூலமாக நீங்கள் கண்காணிக்கலாம். பின்னர் 90 நாட்களில் புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை உங்களுக்கு கிடைத்துவிடும்.