ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை நாம் இந்த பதிவில் காண்போம்.
mAadhaar செயலி
- நமது மொபைலில் Play storeல் இருந்து mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அதில், I concern என்ற ஆப்சனை தேர்வு செய்து, Continue என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர், மொபைல் எண் கேட்கப்படும், அதில், உங்கள் கையில் இருக்கும் மொபைல் எண்ணை கொடுத்துக் கொள்ளலாம்.
- அந்த எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவிட்டு, SUBMIT கொடுக்க வேண்டும்.
- இப்பொழுது திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் ‘VERIFY AADHAAR’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்டிருக்கும் CAPTCHA வை உள்ளிட வேண்டும்.
- இப்பொழுது, வரும் திரையில் உங்கள் பெயர், வயது, போன்ற விவரங்களுடன் நீங்கள் ஆதாரில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணின் கடைசி 3 இலக்கங்கள் காண்பிக்கப்படும்.
- WEBSITE வழிமுறைகள்;
- ஆதாரில் கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை தெரிந்து கொள்ள ‘AADHAAR AYUSHMAN’ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் முகப்பு பக்கத்தில் இருக்கும் ஆதார் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் வரும் பக்கத்தில், SCHEME என்பதில் PMJAY என்பதையும், உங்கள் மாநிலத்தையும், ஆதார் எண்ணையும் உள்ளிட்டு ‘GENERATE OTP’ என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களின் கடைசி 4 இலக்க எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- DIGILOCKER வழிமுறைகள்:
- முதலில் DIGILOCKER தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உள்நுழைய உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், ஆதார் நம்பர் போன்ற விவரங்களை உள்ளிட்டு SUBMIT கொடுக்க வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பலாமா என்று அதன் கடைசி 4 இலக்க எண்கள் திரையில் காண்பிக்கப்படும்.