Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் பழைய போட்டோவை மாற்றணுமா….? இதோ எளிதான வழி…. வாங்க எப்படினு பார்க்கலாம்…!!!!

ஆதார் கார்டில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்க லாம்.

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் இதர பல சேவைகளுக்கு பயனாளிகளின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பலருக்கு சில வருடங்களுக்கு முன் எடுத்த நிலையில், பழைய புகைப்படமாக இருக்கும். எனவே இந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு தற்போது உள்ள புகைப்படத்தை அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மற்றும் இமெயில் ஆகியவற்றை திருத்தம் செய்துகொள்ளவும்  அனுமதிக்கப்படுகிறது. இந்த  திருத்தங்களை மேற்கொள்ள, அதற்கான தொடர்புடைய அதிகாரியிடம் அப்பாயின்மென்ட் பெற வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் முதலில் இருக்க வேண்டும் மற்றும் ஆன்லைன் முறையிலேயே இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்,

  • முதலில் யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://uidai.gov.in/ அல்லது ஆதார் ஆப் ஆகிய தளங்களுக்கு செல்ல வேண்டும்.
  • HOMEPAGE பக்கத்திலுள்ள ஆதார் டேப் என்பதை கிளிக் செய்து அதில் புக் ஆன் அப்பாயின்மென்ட் (book an appointment) என கொடுக்க வேண்டும்.
  •  இதனை தொடர்ந்து மாநிலம், மாவட்டம், பின்கோடு போன்ற விவரங்களை கொடுத்து அருகாமையிலுள்ள என்ரோல்மென்ட் மையத்தை தேட வேண்டும்.
  • இதன் பிறகு உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் என்ரோல்மென்ட் மையத்தை தேர்வு செய்ய வேண்டும். புக் ஆன் அப்பாயின்மென்ட் கொடுக்க வேண்டும்.
  • தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, புக் அப்பாயின்மென்ட் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது திறக்கப்படும் புதிய பக்கத்தில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்கான அப்பாயின்மென்ட் பெற தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அப்பாயின்மென்ட் எண் வரும்.
  • இந்த அப்பாயின்மென்ட் எண் மற்றும் ஏற்கெனவே உள்ள ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள என்ரோல்மென்ட் மையத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்ய வேண்டும்.
  • பயோமெட்ரிக் மற்றும் இதர விவரங்களை சரிபார்ப்பதன் மூலமாக உங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்யலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும்.

Categories

Tech |