ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டில் மொபைல் நம்பரை எப்படி மாற்றுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. இது இல்லாமல் அரசின் எந்த ஒரு சலுகையையும் நம்மால் பெற முடியாது. மொபைல் நம்பர், வங்கி கணக்கு, பான் கார்டு போன்ற அனைத்திலும் ஆதார் கார்டு இணைத்து வைத்திருப்பது கட்டாயம். அப்படிப்பட்ட ஆதார் கார்டில் மொபைல் நம்பரை நாம் அப்டேட் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் ஆதார் கார்டு எடுக்கும் போது நாம் முதன் முதலில் வைத்திருந்த நம்பரை கொடுத்திருப்போம். அதற்குப் பிறகு செல்போன் நம்பர்களை நாம் மாற்றி இருப்போம். அதை ஆதாரில் அப்டேட் செய்யாமல் இருந்திருந்தால் ஓடிபி வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ஆதார் கார்டில் மொபைல் அப்டேட் கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதனை ஆன்லைன் மூலமாகவே செய்ய முடியும். அது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
எப்படி செய்வது:
ஆதார் அமைப்பின் ask.uidai.gov.in இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். பின்னர் உங்களது மொபைல் நம்பரைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு ’send OTP’கொடுக்க வேண்டும்.புதிதாக கொடுக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும். அந்த ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ‘submit OTP & proceed’ கொடுக்க வேண்டும்.
இதையடுத்து, Online Aadhaar Services என்ற மெனுவில் நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் மொபைல் நம்பர் அப்டேட் என்பதை கிளிக் செய்யவும். what do you want to update என்பதைத் தேர்வு செய்து தேவையான விவரங்களைப் பதிவிட வேண்டும். மொபைல் நம்பரை பதிவிட்ட பிறகு submit செய்தவுடன் புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும்.
அதில் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட வேண்டியிருக்கும். இப்போது ஒரு OTP நம்பர் உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு save and proceed கொடுக்க வேண்டும். பின்னர் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று 25 ரூபாய் செலுத்தினால் மொபைல் நம்பர் அப்டேட் ஆகிவிடும்.