Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் நம்பர்…. இனி உங்க வீட்டு வாசலிலே மாற்றிக்கொள்ளலாம்…. செம அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும்.

ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் செய்ய முடியும். எனவே ஆதார் கார்டில் மொபைல் செல்போன் நம்பரை கட்டாயம் இணைத்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்ற விரும்புபவர்கள் இனி வீட்டிலேயே ஈஸியாக மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இனி ஆதார் வைத்திருப்பவர்கள் வீட்டு வாசலிலேயே எளிதாக செல்போன் நம்பரை மாற்றி கொள்ளலாம்.

இந்த சேவையை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. செல்போன் நம்பரை இணைக்கும்படி நீங்கள் தெரிவித்தால் அருகில் உள்ள தபால்காரர் உங்களுடைய ஆதார் கார்டில் மொபைல் எண் மற்றும் சேவையை வழங்கி விடுவார். நாடு முழுவதும் உள்ள 650 இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கிளைகள் மூலம் இந்த சேவை உங்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |