ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. வங்கிக்கணக்கு, மொபைல் எண் ,பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த விஷயங்களுக்கும் படிப்படியாக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன.
எனவே நம்முடைய ஆதார் உண்மையானதா? அல்லது போலியானதா என்று செக் பண்ணுவது அவசியமாகும். இதை எப்படி கண்டுபிடிப்பது? என்பது குறித்து ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆதார் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வளங்கியுள்ளது. அதில் 12 இலக்க எண் கொண்ட ஆதார் எண் தானா? எண்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்க resident.uidai.gov.in/verify என்ற லிங்க்கை கிளிக் செய்து அதில் 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டு கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட வேண்டும். பின்னர் verify கொடுத்தால் அந்த எண் உண்மையில் அதிகாரப்பூர்வமான ஆதார் எண்தானா என்று தெரிந்துவிடும்.