இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். இது அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அரசு நலத்திட்ட உதவிகள் முதல் பல்வேறு விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, சிலிண்டர் கணக்கு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இவ்வாறு முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் தாங்களே ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதற்கான வசதிகளை UDAI வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை விஷயத்தில் இரண்டு மிக முக்கியமான மாற்றங்களை UDAI கொண்டு வந்துள்ளது. அதாவது முகவரி மாற்றத்திற்கான ஆப்ஷன் “address validation letter” தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை வாடிக்கையாளர்கள் யாரும் இந்த வசதியின் தங்களுடைய முகவரியை அப்டேட் செய்ய முடியாது. இந்த வசதியை தற்போது ஆதார் வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் கார்டில் பழைய பிரிண்ட் அவுட்டை எடுக்க முடியாது. அதற்கு பதிலாக பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் கார்டை மட்டுமே பிரிண்ட் எடுத்து வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.