நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
எனவே பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களுடைய ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியாமல் இருக்கும். அதை எப்படி மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
உதலில் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதள முகவரியை open செய்யவும்.
அதில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும்.
இதையடுத்து view Link Aadhaar status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.