Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க வீட்டுக்கே வரும் ஆதார் சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் ஆதார் கார்டில் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் இருந்த பட்சத்தில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யும் வசதி வந்த பிறகு தாங்களாகவே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்கின்றனர்.

இருந்தாலும் புகைப்படம் உள்ளிட்ட சில விஷயங்களை ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று தான் அப்டேட் செய்ய முடியும். இந்நிலையில் ஆதார் அட்டைதாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்குவதற்கு புதிய வசதியை ஆதார அமைப்பு கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொலைபேசி எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். ஆதார் அப்டேட்டை எளிதாக மேற்கொள்வதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வங்கியில் பணிபுரியும் தபால் காரர்களுக்கு ஆதார் அமைப்பு பயிற்சி வழங்கி வருகிறது.

இந்த தபால்காரர்கள் பயனாளிகளின் வீட்டு வாசலில் ஆதார் புதுப்பிப்பை சேவைகளை வழங்குவார்கள். அதே சமயம் ஆதார் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத தனி நபர்களுக்கான புதிய ஆதார் அட்டைகளை உருவாக்கவும் தபால்காரர்கள் உதவி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால்காரர்களுக்கு வீட்டிற்கே வந்து சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் கேட்ஜெட், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய ஆதார் கிட் வழங்கப்படும். இவர்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகளையும் உருவாகி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |