இந்தியாவில் தனிநபரின் அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இது மிக முக்கியமான ஆவணம். அரசின் நலத்திட்டங்களில் இணையவும், வங்கிக் கணக்கு தொடங்குவது, பள்ளி படிப்பு முதல் அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். இவ்வளவு முக்கியமான ஆதாரை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம்.
தங்களின் தனிப்பட்ட விவரங்களை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை UIDAI பயனாளர்களுக்கு வழங்குகிறது. அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வீட்டில் இருந்தபடியே புதிய ஆதார் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில், பல மோசடிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாஸ்க்டு ஆதார் என்று ஒரு ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அந்த அட்டையில் உங்களது 12 இலக்க ஆதார் எண் மட்டுமே இருக்கும். உங்களைப் பற்றிய பிற தகவல்கள் எதுவும் இடம் பெறாது. அதிலும் உங்களது ஆதார் எண்ணின் முதல் x என்ற குறியீட்டிலும் கடைசி நான்கு கிரகங்கள் மட்டுமே நம்பராகவும் இருக்கும்.
மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
அதில் காண்பிக்கப்படும் கேப்சா குறியீட்டை பதிவிட்டு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்ப வேண்டும்.
ஓடிபி மூலம் லாகின் செய்த பிறகு, “I Want a Masked Aadhar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உங்களுக்கான இ-ஆதார் காப்பி ஒன்றை டவுன்லோட் செய்யவும்.
மாஸ்க்டு ஆதார் கார்டு பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு ஆகிவிடும். இந்த ஆவணம் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டதாகும்.