Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களே உஷார்…. இனி யாரும் இதை பண்ணாதீங்க….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் முதலில் ஆதார் எடுக்கும் வசதியை தற்போது ஆதார அமைப்பு வழங்குகிறது. இதற்கு ஆவணமாக குழந்தையின் பெற்றோரின் ஆதார் அட்டை கட்டாயம் அவசியம்.

அதனைத் தவிர்த்து தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதனை இறுதியில் ஆன்லைன் மூலமாக முடித்து விடலாம். ஆதாரில் விவரங்களை மாற்றும்போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி பதிவிட்டால் மட்டுமே விவரங்களை மாற்ற முடியும்.

இந்த ஓடிபி எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது என மத்திய அரசை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஓடிபி கேட்டு ஏதாவது ஏஜென்சியில் இருந்து அழைப்பு,குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஏதாவது வந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம் என்றும் தற்போது மோசடிகள் நடைபெற்ற வருவதால் இதனை யாரிடமும் பகிர வேண்டாம் என ஆதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எப்போதுமே ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மட்டுமே ஆதார பதிவிறக்கம் செய்ய வேண்டும். தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க உங்களை ஆதார் கார்டுகளை லாக் செய்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அன்லாக் செய்யவும் .மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் 16 இலக்க vid என்கிற விர்ச்சுவல் என்னை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |