Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது இனி ரொம்ப ஈசி….. வாங்க எப்படினு பார்க்கலாம்…..!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டில் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் சரியாகவும் அப்டேட் ஆகவும் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். ஒரு சிலர் பல்வேறு காரணங்களுக்காக தங்களது இருப்பிட முகவரியை மாற்றி இருப்பார்கள்.

அவ்வாறு செய்திருந்தால் புதிய முகவரியை உடனே ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். அது சுலபமான காரியம் தான். இதற்காக எங்கும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிலிருந்து கொண்டு இந்த வேலையை முடித்து விடலாம். ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனது இணையதள பக்கத்தில் ஆதார் தொடர்பான திருத்தங்களை செய்யும் வசதியை மக்களுக்கு வழங்குகிறது. இதன் மூலமாக எளிதில் முகவரி விவரங்களை மாற்ற முடியும்.

முதலில் ஆதார் அமைப்பின் uidai.gov.in அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும்.

அதில் ‘update Aadhaar’ என்ற வசதியை கிளிக் செய்து, ‘update your address online’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் திருத்தம் செய்ய முடியும்.

அடுத்த பக்கத்தில் உங்களது மொபைல் எண்ணைப் பதிவிட்டு ’get OTP’என்பதை கிளிக் செய்யவும்.

உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்கவும்.

அடுத்ததாக, ‘address update’ என்பதில் சென்று உங்களது முகவரி குறித்த விவரங்களைப் பதிவிடவும்.

பிறகு முகவரிக்கு உண்டான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பர் ஒன்று வழங்கப்படும்.

ஒருவேளை ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் ஆதார் சேவை மையத்துக்குச் சென்றுதான் முகவரி விவரங்களில் திருத்தம் செய்ய முடியும்.

Categories

Tech |