மத்திய அரசு ஆதார் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான முக்கிய ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகள் வரை தற்போது எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையானது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் முக்கியமான ஒன்றாக திகழ்வதால், ஆதார் அட்டையில் பிறந்த தேதி, மொபைல் நம்பர், புகைப்படம் மற்றும் முகவரி போன்ற விவரங்களை அப்டேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விவரங்களை ஆன்லைன் மூலமாகவே தற்போது அப்டேட் செய்து கொள்ளலாம் என UDAI அறிவித்துள்ளது. இந்த விவரங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும்போது மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். இந்த otp நம்பரை வேறு யாருக்கும் பகிர வேண்டாம் என மத்திய அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆதார் விவரங்களை UDAI இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் உங்கள் ஆதார் விபரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஓடிபி நம்பரை வேறு யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.