Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை தொலைந்து விட்டாதா?…… கவலை வேண்டாம்…..! உடனே இதை செய்யுங்க….. முழு விவரம் இதோ….!!!!

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு.  பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமானதாகிவிட்டது. அப்படி இருக்கையில் தவறுதலாக உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் நேரடியாக உங்கள் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து கொண்டு, அதனை பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் காப்பி ஒன்றை உங்கள் ஃபோனில் வைத்துக் கொண்டால் நீங்கள் எங்கு சென்றாலும், ஆதார் அட்டையை நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குறித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை நேரடியாக டவுன்லோட் செய்வதற்கான லிங்க் யுஐடிஏஐ தளத்தில் இருக்கிறது.https://myaadhaar.uidai.gov.in/

ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யும் முறை:

ஆதார் எண் அல்லது Enrolment ID அல்லது Virtual ID

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி

பின்னர் ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் uidai.gov.in ஆதார் மீட்பு கோரிக்கையை முன்வைக்க வேண்டும். 1947 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் உங்களது ஆதார் Enrolment IDஐ தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் ஆதாரம் டிஜிட்டல் நகலையும் ஈசியாக பெற்றுக்கொள்ளலாம்.

முதலில் நீங்கள்ஆதார் இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதில் உள்ள ‘My Aadhaar’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதில் Retrieve Lost or Forgotten EID/UID Number ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.

பெயர், மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும், உங்கள் மொபைலுக்கு வரும் OTP பாஸ்வோர்டை பதிவிட்டு Login செய்யவும். இதன் பிறகு ஒடிபியை பதிவு செய்து கிளிக் செய்யவும். இதன் பிறகு Validate & document என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது ஆதாரின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |