Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி பதிவிறக்கம் செய்யணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஆதார் அட்டைகளை வழங்கும் அமைப்பான இந்தியதனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தற்போது பயனர்களிடம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றாலும், யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. அதாவது பயனாளர்கள் தற்போது யுஐடிஏஐ இணையதளத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி ஆதார் பிவிசிகார்டை பதிவிறக்கம் செய்யலாம். இதனை செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பயனர்கள் கடைபிடிக்கலாம். அதாவது,

#  https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளதுக்குச் சென்று “எனது ஆதார்” அதாவது “My Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# ஆர்டர் ஆதார் பிவிசிகார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்து, உங்களின் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

# கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

# எனது மொபைல்எண் பதிவு செய்யப்படவில்லை விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

# மாற்று மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP அனுப்பு பொத்தானைக் கிளிக்செய்ய வேண்டும்.

# இது நீங்கள் OTP எண்ணைப் பெறுவதற்குத் தேர்வுசெய்யும் எந்த மொபைல் எண்ணாகவும் இருக்கலாம்.

# விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்து ஓ.டி.பி எண்ணை அழுத்திய பிறகு சப்மிட் பொத்தானைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# நீங்கள் தற்போது ஆதார் கடிதத்தின் ப்ரெவ்யூவைப் பார்க்கலாம்.

# தற்போது விபரங்களைச் சரிபார்த்து ஆன்லைனில் பணம் செலுத்த “பணம் செலுத்து” விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் 12இலக்க ஆதார் விபரங்களை வழங்க விரும்பவில்லை எனில், அதற்குப் பதில் 16 இலக்க மெய் நிகர் அடையாள எண்ணையும் (VID) பயன்படுத்தலாம். சில செயல்முறைகள் பதிவு செய்யப்பட்ட மொபைல்எண் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதையும் பதிவு செய்யாத மொபைல் எண் பயனர்களுக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே பதிவு செய்யப்பட்ட மொபைலைப் பயன்படுத்தினால் மட்டுமே ஆதார் ப்ரெவ்யூ கிடைக்கும். பதிவு செய்யப்படாத மொபைல் அடிப்படையிலான ஆர்டருக்கு ஆதார்அட்டை விபரங்களின் முன்னோட்டம், அதாவது ப்ரிவ்யூ கிடைக்காது.

Categories

Tech |