இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ், தபால்காரர்கள் வீட்டிற்கே வந்து ஆதார் அட்டையின் மொபைல் எண்ணை புதுப்பிப்பார்கள். வீட்டிற்கே வந்து ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வசதி ஒரு பரந்த நெட்வொர்க் மூலம் சாத்தியமாகும்.
ஐபிபிபி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வெங்கடராமு கூறுகையில், யுஐடிஏஐ-யின் மொபைல் புதுப்பிப்பு சேவை, தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மற்றும் ஜிடிஎஸ் ஆகியவற்றின் பரந்த நெட்வொர்க் மூலம் வங்கி சேவைகள் கிடைக்காத பகுதிகளிலும் கிடைக்கும் என்றார். தற்போது மொபைல் புதுப்பிப்பு சேவையை மட்டுமே வழங்குகிறது. மிக விரைவில் அதன் நெட்வொர்க் மூலம் குழந்தைகளின் சேர்க்கை சேவையையும் தொடங்கும். யுஐடிஏஐ-yin படி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை 128.99 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.