Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைக்காவிட்டால் ரூ.1000 கிடையாது…? தமிழக மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை…!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்பின், வங்கிக் கணக்கு உடன் ஆதாரை இணைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படாது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க விட்டாலும், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |