Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பில் SHOCKING….. தமிழக மக்களுக்கு முக்கிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது சிலர் வேறு நபர்களின் ஆதார் எண்ணை இணைத்து கோல்மால் செய்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு இணைத்த சுமார் 2.50 லட்சம் ஆதார் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2,811 பிரிவு அலுவலகங்களில் இந்த மாதம் 31ம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாம்களுக்கு நுகர்வோர் நேரில் சென்று உரிய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |