ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு நாம் எஸ்எம்எஸ் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆதாரமில்லாமல் அரசின் நலத் திட்டங்கள் எதையும் பெற முடியாது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் பலருக்கு ஆதாரில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற பல்வேறு விஷயங்களை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஒவ்வொரு முறையும் நாம் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆதார் அப்டேட் செய்வதற்கு ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். ஆனால் சில சேவைகளுக்கு ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்றால் மட்டுமே செய்ய முடியும். இந்நிலையில் எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் சேவைகளை பெறும் வசதியை ஆதார் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையை லாக் செய்வது, ஆதார் அட்டையை அன்லாக் செய்வது போன்ற சேவைகள் எஸ்எம்எஸ் மூலமாக கிடைக்கும். இதற்கு 1947 அன்று எண்ணிற்கு நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.
உங்களுடைய ஐடியை உருவாக்குவதற்கு GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் ஆதாரின் கடைசி நான்கு இலக்கங்களை டைப் செய்து 1947 எண்ணிற்கு அனுப்பவேண்டும். ஆதார் கார்டை லாக் செய்வதற்கு விர்ச்சுவல் ஐடி கட்டாயம் தேவை. முதலில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உருவாக்கிய பின்னர் LOCKUID டைப் செய்து, பின்னர் இடைவெளிவிட்டு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் டைப் செய்து, இடைவெளி விட்டு மொபைல் நம்பருக்கு வந்த ஆறு இலக்க ஓடிபி நம்பரையும் டைப் செய்து அனுப்ப வேண்டும். இப்போது உங்களது ஆதார் கார்டு லாக் ஆகிவிடும். மீண்டும் அன்லாக் செய்வதற்கு அதே முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்து நாம் நமது ஆதார் கார்டை அப்டேட் செய்து கொள்ள முடியும்.