Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உங்க போட்டோ நல்லா இல்லையா?…. உடனே மாத்திடுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து சுய விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள தற்போது பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பலருக்கும் தற்போது பிடிக்காமல் இருக்கலாம்.

சிறுவயதில் எடுத்த புகைப்படம் என்பதால் அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு புகைப்படம் இருக்கும். இதனால் பலரும் ஆதார் கார்டில் புகைப்படத்தை அப்டேட் செய்ய நினைக்கிறார்கள். ஆதார் கார்டில் முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் மாற்றி விடலாம். ஆனால் கைரேகை மற்றும் புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில் மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அதற்கு ஆன்லைன் மூலமாக ஆதார் இன் புகைப்படத்தை மாற்றுவதற்கான என்ட்ரோல்மென்ட் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் ஆதாரம் அமைப்பின் UIDAI இணையதள பக்கத்தில் ஆதார் எண்ட்ரோல்மென்ட் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் சேவை மையத்தில் உங்களின் விபரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டு நேரடியாக உங்களின் புகைப்படம் எடுக்கப்படும். ஆதாரில் புகைப்படம் மாற்றுவதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கூடவே ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும். ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுவதற்கு நீங்கள் எந்த ஒரு ஆவணமும் வழங்க வேண்டாம். பின்னர் ஆதார் கார்டில் புகைப்படம் அப்டேட் ஆவதற்கு குறைந்தபட்சம் 90 நாட்கள் ஆகும். அதன் பிறகு புதிய ஆதார் கார்டை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |