ஆதார் கார்டிலுள்ள சில திருத்தங்களை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். அது தொடர்பாக நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஆன்லைன் சேவையின் வாயிலாக உங்களது பெயர், பாலினம், பிறந்ததேதி, முகவரி, மொழி போன்றவற்றை புதுப்பிக்கலாம். ஆனால் உங்கள் பெயரிலுள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்ய இயலும்.
முழு பெயரையும் மாற்றவேண்டும் எனில் சேவை மையங்களுக்கு தான் செல்லவேண்டும். திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் உள்ள இடத்தில கணவர் பெயரை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஆன்லைன் விவரங்களை புதுப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை என்று தெரிந்துகொள்வோம்.
பெயர் மாற்றம்
# மாற்ற விரும்பும் பெயர் சரியாக பொறிக்கப்பட்டுள்ள எதாவது ஒரு அடையாள சான்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
பிறந்த தேதி
# பிறந்த தேதிக்குரிய ஆதாரத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவைப்படும்.
கணவர் பெயர் உள்ளீடு
இதற்கு திருமண பதிவு சான்றிதழ் தேவைப்படும்
இணையதள முகவரி https://myaadhaar.uidai.gov.in/ ஆகும்