இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அதில் இடம்பெற்றிருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, பாலினம், மொபைல் எண் போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் போன்றவை சரியானதாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி இந்த தகவல்களும் தங்களின் பான் அல்லது இதுபோன்ற அரசின் ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபாடு இல்லாமல் சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் உங்களின் விவரங்கள் சரியானதாக இல்லை என்றால் ஆணையம் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகின்றது. ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. அதாவது பெயர் மாற்றத்தை இரண்டு முறை மட்டுமே திருத்திக் கொள்ள முடியும். அதில் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும். இது போன்ற அனைத்து விவரங்களையும் திருத்த சில வரம்புகள் இருக்கிறது. அதாவது,
1. ஆதரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் முறையில் திருத்தி கொள்ளலாம்.
2. ஆனால் மேற்கண்ட விவரங்களை தவிர மற்ற விவரங்களை திருத்த ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
3. ஆதார் சேவை மையத்திற்கு சென்று தங்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. அதன்பின், proceed to Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
5. இதையடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
6. அதன் பிறகு கேப்ட்சா குறியீடு பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
7. இறுதியாக இந்த OTP எண்ணை பதிவு செய்ய வேண்டும்.