இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிகவும் முக்கியமான ஆவணம். புதிய சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு,புதிதாகப் பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு வைத்து மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வளவு முக்கியமான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பலருக்கும் பிடிக்காமல் இருக்கலாம்.
ஏனென்றால் நீங்கள் எதாவது ஒரு அவசரத்தில் ஆதார் கார்டு எடுத்திருக்கலாம் அல்லது அப்போது உங்கள் முகம் கசங்கி வியர்வை வழிய புகைப்படம் எடுத்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் அப்போதைய வெப்கேமில் புகைப்பட தெளிவும் அந்த அளவிற்கு இருந்திருக்காது. இந்நிலையில் உங்களது அப்போதைய தோற்றத்துக்கும் தற்போதைய தோற்றத்துக்கும் பல்வேறு மாறுபாடுகள் இருக்கலாம். அதனால் உங்கள் ஆதார் அட்டையில் உங்களின் சிறந்த புகைப்படத்தை புதுப்பிக்க விரும்பினால் அதனை நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவதற்கு முதலில் UIDAI- இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன்பிறகு ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் தேவையான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்கவும்.பிறகு ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று படிவத்தை சமர்பிக்க வேண்டும்.உங்களின் புதிய படத்தை இங்கே எடுத்தே தங்களின் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு கட்டணமாக ஜிஎஸ்டி உடன் சேர்த்து 100 ரூபாய் செலுத்த வேண்டும்.அதன் பிறகு நீங்கள் ஒப்புகைச் சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் பெறுவீர்கள். அந்த URN மூலமாக உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பு நீங்கள் கண்காணிக்க முடியும். இந்த புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகலாம்.ஆதார் அட்டையில் உங்களது புகைப்படத்தை மாற்றும் போது அதற்கான புகைப்படம் எடுக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்களின் ஆதார் அட்டையில் சிறந்த புகைப்படத்தை பெற விரும்பினால் இதனை செய்யுங்கள்.