இந்தியாவில் தனிமனித அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஏ ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடி செய்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை வைத்து திருடி மோசடி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணம். அதனை மற்றவர்களிடம் நாம் கொடுக்கும் போது தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் உள்ளது. உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் திருட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆதார் கார்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்படி ஒரு வேலை உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் என்ன செய்ய வேண்டும், அதனை எப்படி கண்டுபிடிப்பது என்று கவலை வேண்டாம். உங்களின் ஆதார் கார்டு எப்போது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
ஆதார் அமைப்பின் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சென்று
‘aadhaar services’ பிரிவில் ’Aadhaar Authentication History’ என்பதை கிளிக் செய்யவும்.
உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டு ’Send OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்கவும்.
அதன் பிறகு ஆதார் தொடர்பான தகவல்களை நிரப்ப வேண்டும்.
கடைசியாக ‘Verify OTP’ என்பதைக் கிளிக் செய்தவுடன் முழுமையான தகவல்கள் அடங்கிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எப்போது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்ற தகவலை இதில் நீங்கள் பெறலாம்.
இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தால், 1947 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.