இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் மலையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை அனைத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இந்த ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒருவருடைய ஆதார் விவரங்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஆதாரை வைத்து பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆதார் கார்டை தேவையில்லாமல் வேறு யாரிடமும் பகிர்வது பாதுகாப்பானதாக இருக்காது என்று தொடர்ந்து ஆதாரம் அமைப்பு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆதார அமைப்பு வெளியிட்டுள்ள twitter பதிவில்,வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் செய்யும்படி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் ஒருபோதும் போன் செய்து வலியுறுத்துவதில்லை.
ஆதார் தொடர்பான அப்டேட்டுகளை சம்பந்தப்பட்ட நபர்கள் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் வந்து தாங்களே செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது